அமெரிக்காவில் ஷூட்டிங்; அனுஷ்கா படத்துக்கு விசா சிக்கல்

சிறு இடைவெளிக்கு பிறகு அனுஷ்கா நடிக்கும் படம் சைலன்ஸ். இதில் அவருடன் மாதவன் நடிக்கிறார். வசனங்களே இல்லாத படமாக இது உருவாகிறது. திரில்லர் கதை படமாக இது உருவாகிறது. 4 மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க வேண்டியது. ஆனால் திட்டமிட்டபடி ஷூட்டிங் தொடங்கவில்லை. காரணம், விசா பிரச்னை. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாகிறது.

கடந்த 4 மாதமாக விசா கிடைக்காததால் படம் தள்ளிக்கொண்டே சென்றது. இப்போதுதான் விசா கிடைத்திருக்கிறது. இதையடுத்து படப்பிடிப்பு துவங்குகிறது. இதில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மட்சென் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்பட பலர் நடிக்கிறார்கள். ஹேமந்த் மதுர்கர் இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் திரைக்கு வர உள்ளது.

× RELATED படப்பிடிப்பு தளத்திற்குள் புகுந்து...