கசட தபறவில் ரெஜினா, பிரியா பவானி

புலி படத்துக்கு பிறகு சிம்புதேவன் இயக்க உள்ள படம் கசட தபற. இந்த படத்தை வெங்கட்பிரபு தயாரிக்க உள்ளார். திரில்லர் கதை கொண்ட இந்த படத்தில் சந்தீப் கிஷன், சாந்தனு, ரெஜினா, பிரியா பவானி சங்கர், விஜயலட்சுமி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் வித்தியாசமாக 6 இசையமைப்பாளர்கள், 6 ஒளிப்பதிவாளர்கள், 6 எடிட்டர்கள் பணியாற்றுகின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரன், சாம் சி.எஸ்., சீன்ரோல்டன், பிரேம்ஜி என 6 இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர். விஜய் மில்டன், பாலசுப்பிரமணியம், ஆர்.டி.ராஜசேகர், எஸ்.ஆர்.கதிர், சக்தி சரவணன், எம்.எஸ்.பிரபு ஆகிய 6 ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றுகின்றனர். இதேபோல் 6 எடிட்டர்கள் படத்தொகுப்பில் ஈடுபடுகிறார்கள்.

Related Stories: