×

ஜெயம் ரவி ஜோடி நிதி அகர்வால்

ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை தொடர்ந்து லஷ்மன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி நடிக்கிறார். இரு படங்களிலும் ஜெயம் ரவி ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். இம்முறை டாப்ஸி நடிப்பார் என்று தகவல் பரவியது.

ஆனால், அவரது கால்ஷீட் சரிப்பட்டு வராததால், நிதி அகர்வால் நடிப்பார் என்று தெரிகிறது. ஜெயம் ரவியின் 25வது படமாக உருவாகும் இதை அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார்.

Tags : Jayam Ravi ,Agarwal ,
× RELATED ரொமான்டிக் காமெடி கதையில் நித்யா மேனன்