×

ஷாலினிக்கு கொரில்லா ‘கிஸ்’

விலங்குகளை வைத்து படமாக்குவதற்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் இருப்பதால் அதுபோன்ற படங்கள் குறைந்துவிட்டது. எல்லாமே கிராபிக்ஸ் விலங்குகளாகவே படங்களில் காட்டப்படுகிறது. ஆனால் ஜீவா நடிக்கும் புதிய படத்தில் கொரில்லா குரங்கு நடிக்கிறது. பட டைட்டிலும் ‘கொர்ரிலா’ தான். இதற்காக ஒரிஜினல் கொரில்லாவை தேடி தாய்லாந்து சென்ற படக்குழு ஹாலிவுட் படத்தில் நடித்த கொரில்லா ஒன்றை தேர்வு செய்து இப்படத்தில் நடிக்க வைத்துள்ளது. டான் சாண்டி இயக்க, விஜய் ராகவேந்திரா தயாரிக்க, சாம் சிஎஸ் இசை அமைத்திருக்கிறார்.

தன்னுடன் நடித்தவர்களுக்கு கொரில்லா கிஸ் கொடுக்குமாம். இந்த ருசிகர தகவலை படத்தில் நடிக்கும் ஜீவா, ராதாரவி, சதீஷ், ராகுல் தாத்தா வெளியிட்டனர். ‘எல்லோருடனும் நன்றாக பழகிய கொரில்லா சிலரை கடிக்கவும் செய்தது. யாரை பார்த்தாலும் முத்தம் கொடுக்கும் பழக்கம் கொண்ட  கொரில்லா, யாராவது முத்தத்தை வாங்க மறுத்தால் அவர்களை கன்னத்தில் பளார் என அறைந்து விடும். ஹீரோயின் ஷாலினி பாண்டேவை கட்டிப்பிடித்து கிஸ்ஸடித்து ஜமாய்த்தது கொரில்லா’ என்றனர்.

Tags : Shruti ,guerrilla ,
× RELATED கன்னியாகுமரியில் அதிர்ச்சி!: மாங்காய்...