×

ராஜமவுலி ஆஸ்கரை வெல்வார்; ஏ.ஆர்.ரஹ்மான் நம்பிக்கை

சென்னை: ஆர்ஆர்ஆர் படத்துக்காக டைரக்டர் ராஜமவுலிக்கு ஆஸ்கர் கிடைக்கும் என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர் ஆங்கில படத்துக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு சில பிரிவுகளில் ஆர்ஆர்ஆர் படம் போட்டியில் இடம்பெற்றுள்ளது. இது பற்றி ரஹ்மான் கூறும்போது, ‘மகதீரா படம் பார்க்கும்போதே ராஜமவுலியின் திறமையை பார்த்து வியந்தேன். இவர் நமக்கான முக்கியமான ஒரு இயக்குனராக கருதினேன். தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்கள் மூலம் முன்னேறியபடி சென்றுகொண்டே இருந்தார். இப்போது ஆஸ்கர் போட்டி வரை சென்றுவிட்டார். கண்டிப்பாக அவருக்கு ஆஸ்கர் கிடைக்கும் என நம்புகிறேன்.’ என்றார்….

The post ராஜமவுலி ஆஸ்கரை வெல்வார்; ஏ.ஆர்.ரஹ்மான் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Rajamouli ,AR Rahman ,Chennai ,AR Rahman Hope ,
× RELATED இளையராஜாவை மறைமுகமாக தாக்கினாரா...