தோற்றத்தை செதுக்கும் அஜீத்

விஸ்வாசம் படத்தில் உடல் தோற்றத்தை குண்டாக்கி, பெப்பர் சால்ட் தோற்றத்தில் நடித்த அஜீத் அடுத்து போனிகபூர் தயாரிக்கும் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இதில் கோட்டு சூட்டு அணிந்து தனது தோற்றத்தை டிப் டாப்பாக காட்டியிருக்கிறார். புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார் அஜீத்.

இப்படத்திற்காக உடல் எடையை குறைக்க இயக்குனர் கேட்டுக்கொண்டதையடுத்து ஜிம்மிலேயே கிடந்து தனது உடல் எடையை நிறையவே குறைத்திருக்கிறார். 90களில் பார்த்ததுபோல் தற்போது கனக்கச்சிதமாக உடல்தோற்றத்தை வடிவமைத்திருக்கும் அஜீத் அந்த தோற்றத்துடன் வெளியிடங்களில் நடமாடத் தொடங்கியிருப்பதாக அவருடன் புகைப்படம் எடுத்துவரும் தல ரசிகர்கள் அப்படங்களை நெட்டில் பரப்பி வருகின்றனர்.

Tags : Ajith ,
× RELATED அஜித்தையே உருகவைத்த மானு!