×

அஞ்சலியிடம் நடிப்பு கற்ற ஹீரோ

‘ஏமாலி’ படத்தில் நடித்தவர் சாம் ஜோன்ஸ். தற்போது லிசா, தர்மபிரபு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். லிசா படத்தில் நடித்தபோது தனக்கு அஞ்சலி நடிப்பு கற்றுக் கொடுத்தார் என்கிறார் சாம் ஜோன்ஸ். மேலும் அவர் கூறியதாவது: கல்லூரியில் படிக்கும் வரை சினிமா ஆசை இருந்ததில்லை. லயோலாவில் படித்தபோது சினிமா நண்பர்கள் அறிமுகமாகி ஆர்வம் ஏற்பட்டது, ஏமாலி படத்தில் அறிமுகமானேன். தற்போது லிசா என்ற 3டி படத்தில் அஞ்சலியுடன் நடித்திருக்கிறேன்.

அஞ்சலி அனுபவமிக்க சீனியர் என்றாலும் என்னை ஒரு புதுமுகமாக பார்க்காமல் ஒவ்வொரு காட்சியிலும் எப்படி நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு குருவை போல சொல்லிக் கொடுத்தார். இது ஒரு ஹாரர் படம். அடுத்து தர்மபிரபு படத்தில் யோகி பாபு எமலோக ஹீரோ, நான் பூலோக ஹீரோ. இதில் எனக்கு ஜனனி அய்யர் ஜோடியாக நடிக்கிறார். அரசியலால் பாதிக்கப்படும் காதலர்களாக நடித்திருக்கிறோம். மேலும் இரண்டு படங்களில் நடிக்கிறேன் என்றார்.

Tags : Anjali ,hero ,
× RELATED அஞ்சலியின் 50வது படம்