×

உடல் எடையை குறைக்க அனுஷ்கா எழுதிய புத்தகம்

இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை கன்னாபின்னாவென கூட்டினார் அனுஷ்கா. அதன் பிறகு எடையை குறைக்க அவர் படாதபாடு பட்டார். பாகுபலி 2வில் கிராபிக்ஸ் மூலம் அவரை ஸ்லிம்மாக காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்நிலையில் டயட் இருந்தும், ஜிம்முக்கு சென்றும் உடல் எடையை குறைக்க முடியாமல் தவித்தார்.

இதனால் பல படங்களின் வாய்ப்புகளையும் இழந்தார். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஃபிட்னஸ் நிபுணரிடம் பயிற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அனுஷ்காவின் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டது. ஒரேயடியாக ஸிலிம் ஆக மாறாவிட்டாலும் குண்டான தோற்றத்திலிருந்து மாறினார்.

இது அவரது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. இந்நிலையில் தான் புதிய தோற்றத்துக்கு மாறியது தொடர்பாக ‘தி மேஜிக் வெயிட்லாஸ் பில்’ என்ற புத்தகத்தை அனுஷ்கா எழுதியுள்ளார். யோகா டீச்சரான அனுஷ்கா, யோகாவில் பிரபலமான நடிகை ஷில்பா ஷெட்டியை இந்நூலுக்கு முன்னுரை எழுத வைத்துள்ளார்.

Tags : Anushka ,
× RELATED மலையாளத்தில் அனுஷ்காவின் முதல் படம்: பேய் வேடத்தில் நடிக்கிறார்