×

ரபி, காரிப் பருவ கொள்முதல் தமிழகத்துக்கு ஏற்றதல்ல: பிரதமர் அலுவலகத்தில் மனு

புதுடெல்லி: தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று டெல்லியில் அளித்த பேட்டி: நெல்லுக்கான ஈரப்பதத்தை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம். காலம் கடந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற ஒன்றிய அரசு, கடந்த வாரம் தான் குழுவை அனுப்பி ஆய்வு செய்துள்ளது. ஆனால் தற்போது வரையில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், தமிழக விவசாயிகள் நெல்லை அறுவடை செய்து விட்டு செய்வது அறியாமல் திகைத்து வருகிறனர்.குறிப்பாக, ரபி, காரிப் பருவம் என்ற கொள்முதல் முறை தமிழகத்திற்கு ஏற்றதல்ல. இது கோடைக்காலத்திற்கு மட்டுமே உரியதாகும். அதனால், இதற்கு என்று சிறப்பு கொள்முதல் அனுமதியை நிரந்தரமாக தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தனியாரிடம் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர, நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

The post ரபி, காரிப் பருவ கொள்முதல் தமிழகத்துக்கு ஏற்றதல்ல: பிரதமர் அலுவலகத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : Rabi ,Karib ,Tamil Nadu ,Prime Minister's Office ,New Delhi ,Coordinating Committee of All Farmers Associations ,P. R. Pandian ,Delhi ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...