தம்மடிப்போம் தண்ணியடிப்போம்... இளம் நடிகைகள் லகலக

ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட பல முன்னணி  ஹீரோக்கள் ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் காட்சிகள் படங்களில் இடம்பெற்றது. புகைப்பிடிக்கும் காட்சிகளை கைவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்த நிலையில் பல படங்களில் ரஜினி, விஜய் போன்றவர்கள் புகைப்பிடிப்பதை தவிர்த்தனர். மாஸ் ஹீரோக்கள் கைவிட்ட இக்காட்சியை சமீபகாலமாக இளம் ஹீரோயின்கள் கையிலெடுத்திருக்கின்றனர்.

சுருட்டு புகைப்பது போல் நடிகை ஹன்சிகா ஒரு படத்தில் நடித்த ஸ்டில் வெளியானது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல் நடிகை ஓவியா தம் அடிப்பது, தண்ணி அடிப்பது என்று இஷ்டத்துக்கு நடித்துவருகிறார். இதுபோல் விவகாரமாக நடிப்பதால் விளம்பரம் எகிறுகிறது என்று கண்மூடித்தனமாக நம்பும் மேலும் சில இளம் ஹீரோயின்கள் இதுபோன்ற காட்சிகளுக்கு ஓ.கே சொல்கின்றனர்.

சாட்டை படத்தில் அறிமுகமானவர் மஹிமா நம்பியார். குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அடுத்து விக்ரம்பிரபு நடிக்கும் அசுரகுரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இப்படத்தில் சிகரெட் புகைப்பதுபோன்ற காட்சியில் மஹிமா நடிக்க வேண்டியிருக்கிறது. அதனால் சிகரெட் பிடிப்பதற்கு பயிற்சி எடுத்து வருகிறார். புகைப்பிடித்து பயிற்சி பெறுவதை வீடியோவாகவும் வெளியிட்டதால் சர்ச்சையாகி இருக்கிறது. புகைப்பிடிக்கும் நடிகைகள் பட்டியலில் சுனைனாவும் இணைந்திருக்கிறார். வெப் சீரியல் ஒன்றிற்காக அவர் சிகரெட் புகைப்பதுபோன்று நடித்திருக்கிறார்.

Tags : actresses ,
× RELATED 4ம் கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்க நடவடிக்கை