×

காப்பீட்டு நிறுவனங்களிடம் உழவர்களுக்கு அதிக இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:சம்பா பருவத்தில் நெற்பயிர் மற்றும் சிறப்புப் பயிர்களுக்காக தமிழக அரசின் சார்பில் காப்பீட்டுக் கட்டண மானியமாக செலுத்தப்பட்ட தொகை மட்டும் ரூ.1,338.89 கோடி. உழவர்கள் சார்பில் பிரீமியமாக செலுத்தப்பட்ட தொகை சுமார் ரூ.225 கோடி. ஒட்டுமொத்தமாக உழவர்களிடமிருந்தும், அரசிடமிருந்தும் பிரீமியமாக ரூ.1,500 கோடிக்கும் கூடுதலாக வசூலித்த காப்பீட்டு நிறுவனங்கள், அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக ரூ.481 கோடி மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது.உழவர்களை காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. காப்பீட்டு நிறுவனங்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி, பருவம் தவறிய மழையால் உழவர்களுக்கு ஏற்பட்ட இழப்பின் மதிப்பு எவ்வளவோ, அதை இழப்பீடாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post காப்பீட்டு நிறுவனங்களிடம் உழவர்களுக்கு அதிக இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,CHENNAI ,BAMA ,Ramadas ,Tamilnadu government ,Sambha ,
× RELATED தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை