×

செங்கல்பட்டு கொலை ஆம்பூர் கோர்ட்டில் 2 வாலிபர்கள் சரண்

சென்னை:செங்கல்பட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முண்டகண் கார்த்தி என்பவர் வெட்டிகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக செங்கல்பட்டு போலீசார் 5 பிரிவுகளின் கீழ்  வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த கொலையில் தொடர்புடைய, தலைமறைவாக இருந்த இருவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் செங்கல்பட்டு கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்த கோபிநாத் (27), செங்கல்பட்டு அடுத்த சின்னாதம் கிராமம் முருகேஷனார் தெருவை சேர்ந்த சூரியபிரகாஷ் (30) ஆகியோர் ஆம்பூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ரவி முன்னிலையில் சரணடைந்தனர். உடனே இருவரையும் ஆம்பூர் டவுன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இருவரும் நேற்று இரவு வேலூர் சிறைக்கு வேனில் அழைத்து செல்லப்பட்டனர்….

The post செங்கல்பட்டு கொலை ஆம்பூர் கோர்ட்டில் 2 வாலிபர்கள் சரண் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Ampur Courte ,Chennai ,Mundaganakan Karthi ,Chengalpat ,Chengalpattu Police ,Saran ,
× RELATED செங்கல்பட்டு படாளம் அருகே கார் மீது...