×

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு ரூ.31.67 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.24.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மீன் விதைப் பண்ணைகள், உட்கட்டமைப்பு வசதிகள், பனிக்கட்டி உற்பத்தி நிலையம், மீன் பதப்படுத்தும் மையங்கள் உள்ளிட்ட  கட்டிடங்களையும், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.6.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள களக் கண்காணிப்பு மற்றும் விவசாயிகளுக்கான தகவல் மையம், கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுக் கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டிடங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.மீன் வளத்தை  பாதுகாத்தல், நிலையான மீன்பிடிப்பு மற்றும் மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில், 5 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அரசு மீன் விதைப்பண்ணை மற்றும் புதியதாக கட்டப்பட்டுள்ள பயிற்சி மையம், திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அரசு மீன் பண்ணையில் 1.09 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் விதைப்பண்ணைகளை முதல்வர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்….

The post கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு ரூ.31.67 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Milk Fisheries ,Aquarium ,Fishermen ,CM G.K. Stalin ,Chennai ,Department of Aquarium and Fishermen Welfare ,Dinakaran ,
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...