×

தீபாவளிக்கு 3 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் சென்னையில் பட்டாசு, இனிப்பு வகைகள் விற்பனை மும்முரம்

* 10,000 வாலா சரவெடி ரூ.8,000, கிப்ட் பாக்ஸ்கள் ரூ.500லிருந்து ரூ.11,000 வரை கிடைக்கிறது* இனிப்பு வகைகள் கடந்த ஆண்டை விட 30% அதிகரிப்புசென்னை: தீபாவளிக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் சென்னையில் பட்டாசு விற்பனை வேகமெடுத்துள்ளது. 10,000 வாலா சரவெடி ரூ.8000க்கு விற்கப்படுகிறது. கிப்ட் பாக்ஸ்கள் ரூ.500லிருந்து ரூ.11,000 வரை விற்கப்படுகிறது. இனிப்பு வகைகள் கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளது. தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகையின்போது அதிகாலையில் எழுந்து எண்ெணய் குளியல் முடித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுகிறது.பண்டிகைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால், சென்னை மாநகரில் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு தங்களுக்கு விருப்பமான துணிகளை தேர்வு செய்து வருகின்றனர். தீபத்திருநாளின் முக்கிய பொருளான பட்டாசு விற்பனை நகரில் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை பாரிமுனையில் உள்ள மொத்த ஏஜென்சிகளுக்கு பட்டாசுகள் சிவகாசியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இவர்களிடம் சில்லரை வியாபாரிகள் ஆர்டர்களை கொடுத்து வருகின்றனர். பாரிமுனை பகுதியில் சாலையோரங்களிலும் ஏராளமான பட்டாசு கடைகள் வைக்கப்படுவது வழக்கம். ஆனால் நீதிமன்ற உத்தரவால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு விற்பனை சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் அங்கு பட்டாசு கடை வளாகம் அமைக்கும் பணி முடிவடைந்து விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) என்று விடுமுறை தினம் என்பதால் விற்பனை மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு பல புது ரகங்கள் விற்பனைக்காக வந்துள்ளன. பல ரகங்கள் வந்தாலும் கடந்த ஆண்டை விட பட்டாசுகள் விலை 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலையும் தள்ளுபடியில் வாடிக்கையாளர்களுக்கே வழங்கப்படுவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.இதுகுறித்து பட்டாசு வியாபாரி ராஜேந்திர பிரசாத் கூறியதாவது: தீபாவளி பண்டிக்கைக்கு இந்த ஆண்டு 200க்கும் மேற்பட்ட பட்டாசு வகைகள் விற்பனைக்காக சிவகாசியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. 20 எண்ணம் அடங்கிய சின்ன கிப்ட் பாக்ஸ் ரூ.750க்கு விற்கப்படுகிறது. கோல்டன் பாக்ஸ் (25 எண்ணம்) ரூ.1050, ஜெம்ஸ் பாக்ஸ் (30 எண்ணம்) ரூ.1300, டைமண்ட் பாக்ஸ் (35 எண்ணம்) 1600, பிளாட்டினம் பாக்ஸ் (40 எண்ணம்) ரூ.2000, பிரின்ஸ் பாக்ஸ் (45 எண்ணம்) ரூ.2400, ராயல் பாக்ஸ் (50 எண்ணம்) ரூ.2850, கிங் ஆப் கிங் பாக்ஸ் (60 எண்ணம்) ரூ.3900, எவரெஸ்ட் பாக்ஸ் (75 எண்ணம்) ரூ.6800, எம்பயர் பாக்ஸ் (100 எண்ணம்) ரூ.11,100க்கும் விற்கப்படுகிறது. பட்ஜெட் கிப்ஸ் பாக்ஸ்கள் பென் 10 ரூ.500, பீம் கிருஷ்ணா ரூ.630, கூகுள் ரூ.850, செலிபிரேஷன் ரூ.1130, சூப்பர் பேமிலி ரூ.1460,மெகா பெஸ்டிவல் ரூ.1750, விஐபி ஸ்பெஷல் ரூ.2100, பெஸ்டிவல் நைட்50 ரூ.2350க்கும் விற்கப்படுகிறது. குளோரி கிப்ட் பாக்ஸ் ரூ.775 (27 ரகம்), ஹீரோ சிக்ஸ்டின் கிப்ட் பாக்ஸ் ரூ.1110 (33 ரகம்), டி20 கிப்ட் பாக்ஸ் ரூ.1499 (41 ரகம்) விற்கப்படுகிறது. சின்ன லட்சுமி வெடி பாக்ஸ் ரூ.24 முதல் ரூ.40 வரையும், டபுள் சவுண்ட் வெடி ரூ.40, அணுகுண்டுகளை பொறுத்தவரை ரூ.32, ரூ.45, ரூ.65, ரூ.130, ரூ.165 வரையும், புஸ்வாணம் ரூ.56, ரூ.68, ரூ.86, ரூ.158, ரூ.200, ரூ.250, ரூ.280 வரை உள்ளது. கம்பி மத்தாப்புகள் குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் ரூ.910 வரை விற்கப்படுகிறது.ராக்கெட்டுகளை பொறுத்தவரை ரூ.74 முதல் ரூ.310 வரையும், தரைச்சக்கரம் ரூ.78, ரூ.120, 150, ரூ.160 ரூ.180, ரூ.280 வரை உள்ளது. லட்சுமி வெடி ரூ.38 முதல் ரூ.78 வரை உள்ளது. 100 வாலா சரவெடி ரூ.95, 200 வாலா சரவெடி ரூ.190, 300 வாலா சரவெடி ரூ.290, 600 வாலா சரவெடி ரூ.580, 1000 வாலா சரவெடி ரூ.800, 2000 வாலா சரவெடி ரூ.1600, 5000 வாலா சரவெடி ரூ.4000, 10000 வாலா சரவெடி ரூ.8000க்கும் விற்கப்படுகிறது. கம்பி மத்தாப்புகள் ரூ.22 முதல் அதிகபட்சம் ரூ.910 வரை விற்கப்படுகிறது. கலர் தீப்பெட்டிகள் ரூ.78 முதல் ரூ.700 வரை விற்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இனிப்பு வகைகள் கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறிய கடைகளில் மொத்த விலையில் ரூ.130க்கு விற்கப்பட்ட முறுக்கு தற்போது ரூ.150, சீவல் ரூ.120லிருந்து ரூ.140 ஆகவும், மிக்சர் ரூ.130லிருந்து ரூ.150க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இனிப்பு வகைகளில் ஒரு கிலோ லட்டு ரூ.160லிருந்து ரூ.200க்கும், அதிரசம் ரூ.160லிருந்து ரூ.180க்கும், சோமோச ரூ.120லிருந்து ரூ.180க்கும் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு சிறிய கடைகளில் தான். பெரிய கடைகளில் தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. பலவிதமான துணிகள் விற்பனைக்காக வந்துள்ளது. இந்தாண்டு கடந்த ஆண்டை விட ரூ.30 முதல் 40 சதவீதம் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். தீபாவளி ஆண்டுக்கு ஒருமுறை தான் வருகிறது. இதில் எப்படி சிக்கனம் செய்ய முடியும் என்று விலையை பொருட்படுத்தாமல் பட்டாசுகள், இனிப்பு, துணிகளை வாங்கி வருகின்றனர்….

The post தீபாவளிக்கு 3 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் சென்னையில் பட்டாசு, இனிப்பு வகைகள் விற்பனை மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Chennai ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...