×

பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கும் திட்டம் நாளை துவக்கம்: 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை

புதுடெல்லி: அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும்  ‘ரோஸ்கர் மேளா’ திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையையும் அவர் வழங்குகிறார். நாடு முழுவதும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் ஒன்றிய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் கடந்த ஜூனில் பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி 10 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் ‘ரோஸ்கர் மேளா’ இயக்கத்தின் தொடக்க விழா நாளை நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி காணொலி மூலமாக கலந்து கொண்டு, இதை தொடங்கி வைக்கிறார்.  இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரோஸ்கர் மேளா தொடக்க விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்குகிறார்.  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கும், நாட்டு மக்களின் நலனை உறுதி செய்வதற்குமான பிரதமரின் தொடர்ச்சியான உறுதிபாட்டின் அரசு அங்கமாகவும், முன்னேற்றமாகவும் இது இருக்கும்,’ என கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளவர்கள் ஒன்றிய அரசின் 38 அமைச்சகங்கள் அல்லது இந்திய அரசின் பல்வேறு பொதுத்துறைகளில் பணியில் சேர உள்ளனர். காங்கிரசுக்கு பாடம்: தபி மாவட்டம், வியாரா என்ற நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், ‘‘பழங்குடியின மக்களை காங்கிரஸ் அவமதித்து விட்டது. அதை அந்த சமூக மக்கள் மறக்க மாட்டார்கள். அதற்குரிய தகுந்த பாடத்தை காங்கிரசுக்கு கற்பிப்பார்கள்’’ என்றார்….

The post பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கும் திட்டம் நாளை துவக்கம்: 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,New Delhi ,Modi ,Mela ,
× RELATED மருத்துவமனை, பொது இடங்களில் தீ...