×

சசிதரூர் மீது காங். பாய்ச்சல்இங்கே ஒரு முகம் அங்கே வேறு முகம்

புதுடெல்லி: தேர்தல் குழுவின் முன் ஒரு முகமும், ஊடகங்களுக்கு முன் மற்றொரு முகமும் காட்டுகிறார் என சசி தரூரை  காங்கிரஸ் தேர்தல் ஆணைய தலைவர்  சாடியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி  தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் கார்கே வெற்றி பெற்றார்.   சசிதரூர்  காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர்  மதுசூதன் மிஸ்திரிக்கு  எழுதிய கடிதத்தில், ‘வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளன. உபி.யில் பதிவான வாக்குகளை செல்லாததாக அறிவிக்க வேண்டும்,’ என குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில்,  சசிதரூரை காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி கடுமையாக சாடியுள்ளார். இது பற்றி மிஸ்திரி கூறுகையில், ‘‘உங்கள்( தரூர்) கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டோம், இருந்த போதிலும், மத்திய தேர்தல் ஆணையம் உங்களுக்கு எதிராக சதி செய்வதாக ஊடகங்களிடம் தெரிவித்தீர்கள். எங்கள் பதில்கள் அனைத்திலும் நீங்கள் திருப்தி அடைகிறீர்கள் என்று எனக்கு முன் ஒரு முகமும், எங்களுக்கு எதிராக ஊடகங்களில் குற்றம் சாட்டும்போது வேறு முகமும் காட்டுகிறீர்கள்,’ என தெரிவித்தார். …

The post சசிதரூர் மீது காங். பாய்ச்சல்இங்கே ஒரு முகம் அங்கே வேறு முகம் appeared first on Dinakaran.

Tags : Sasitaroor ,New Delhi ,Congress ,Shashi Tharoor ,
× RELATED சர்ச்சை கருத்தைத் தொடர்ந்து பதவி...