×

டெல்லி மதநல்லிணக்க மலர் பேரணி தமிழக கலைகுழுவினருக்கு முதல் பரிசு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: டெல்லியில் மத நல்லிணக்கத்தினை வலியுறுத்தி ஆண்டுதோறும்  நடைபெறும் ‘மத நல்லிணக்க மலர்ப் பேரணி’  மற்றும் கலை நிகழ்ச்சிகள் கடந்த 15ம் தேதி டெல்லி மேஹ்ருளி பகுதியில்  நடந்தது.  அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருந்திட வேண்டும் என்ற  நோக்கத்திற்காக இந்த மலர்ப் பேரணி  ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில்,  தமிழ்நாடு அரசின் சார்பாக  25 கலைஞர்கள்  கொண்ட கலைக் குழுவினர் அலங்கார மலர்ப் பதாகைகள் தாங்கி,  கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். இந்நிகழ்ச்சியின் பார்வையாளர்களை,  தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையக் குழுவினர் வழங்கிய கலைநிகழ்ச்சி  மிகவும் கவர்ந்த வண்ணமாக அமைந்தது. தமிழ்நாடு கலைக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.  விழாவில் டெல்லி முதல்வர்  சார்பில் பங்குபெற்ற டெல்லி மேஹ்ருளி சட்டமன்ற உறுப்பினர்  நரேஷ் யாதவ் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களை பாராட்டினார்.  கடந்த ஆண்டுகளில் பங்குபெற்ற மாநிலத்தின் கலைஞர்களை கவுரவிக்கும் பொருட்டு பங்கேற்பு சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டது.  இந்த ஆண்டு (2022) தமிழ்நாடு கலைக்குழுவிற்கு முதல் பரிசு பெற்றதாக  தேர்வுக் குழுவால்  அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத்  துறை கூடுதல் இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள்  கலந்து கொண்டனர்….

The post டெல்லி மதநல்லிணக்க மலர் பேரணி தமிழக கலைகுழுவினருக்கு முதல் பரிசு appeared first on Dinakaran.

Tags : Delhi Religion Flower Rural ,Tamil Nadu Artwork ,Chennai ,Tamil Nadu Govt ,Religious Reconciliation Polarp Rally ,Delhi ,Delhi Religion Flower Rallery ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!