6 மாதத்துக்கு ஒரு படம்; சிவகார்த்திகேயன் முடிவு

ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,  நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் நாளை திரைக்கு வருகிறது. இதில் நடித்தது குறித்து சிவகார்த்திகேயன் கூறியதாவது: ராஜேஷ் டைரக்‌ஷனில் நடிக்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை இப்போது நிறைவேறியது. இரண்டரை மணி நேரம் கவலையை மறக்கச் செய்யும் சம்மர் ஹாலிடே ஸ்பெஷல் படமாக இருக்கும். டாஸ்மாக் காட்சிகள் கிடையாது. யு சான்றிதழ் கிடைத்துள்ளது. எனக்கும், நயன்தாராவுக்குமான ஈகோ மோதலை காமெடியாக சொல்லி இருக்கிறோம்.

வேலைக்காரன் படத்துக்கு பிறகு அவருடன் இணைந்து நடித்துள்ளேன். அந்த படத்தில் அவருக்கு நடிக்க அதிக வாய்ப்பு கொடுக்கவில்லை. அந்தக் குறை எனக்கு மட்டும் அல்ல, எல்லோருக்கும் இருந்தது. அதை இந்த படத்தில் ஈடுகட்டியுள்ளோம். இனிமேல் 6 மாதங்களுக்கு ஒரு புதுப்படம் என,
வருடத்துக்கு 2 படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Sivakarthikeyan ,
× RELATED வாட்ஸ்அப்பில் வைரலாகும் பகீர்...