×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரி உட்பட 3 போலீசார் சஸ்பெண்ட்: டிஜிபி அதிரடி நடவடிக்கை..!

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரி உட்பட 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழக சட்டப் பேரவையில் கடந்த 18ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அடங்கிய பரிந்துரைகள் மீதும், அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்று உறுதியளித்தார். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக பணியாற்றிய திருமலையை டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவுப்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டின்போது தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த திருமலை. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருமலை தற்போது நெல்லை மாநகர சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். அத்துடன் சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். …

The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரி உட்பட 3 போலீசார் சஸ்பெண்ட்: டிஜிபி அதிரடி நடவடிக்கை..! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi firing ,DGP ,Chennai ,Thoothukudi ,Tamil Nadu Legislative Assembly ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநில டிஜிபி நீக்கம்: தேர்தல் ஆணையம் உத்தரவு