×

நீதான் எனக்கு எல்லாம்... பிரியா வாரியர் மெசேஜ்

ஒரு அடார் லவ் மலையாள படத்தில் கண்ணடித்து பிரபலமான நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கு ஜோடியாக ரோஷன் நடித்திருந்தார். படம் ஹிட்டானதோ இல்லையோ? இந்த ஜோடி ஹிட்டாகிவிட்டது. பிரியா வாரியர் தற்போது இந்தியில் நடித்து வருகிறார். ஆனாலும் தன்னுடன் முதல்படத்தில் இணைந்து நடித்த ரோஷனுடன் டேட்டிங் செய்வதாகவும் இருவருக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு காரணம் பிரியா வாரியர், பிறந்தநாளன்று ரோஷனுக்கு அனுப்பிய மெசேஜில், ‘நீதான் எனக்கு எல்லாம்’ என்று தெரிவித்திருந்தார். இந்த மெசேஜ்தான் இருவருக்கும் காதல் கிசுகிசுவை கிளப்பிவிட்டிருக்கிறது. இதுபற்றி பிரியாவிடம் கேட்டபோது,’சினிமாவில் வதந்திகள் தொழிலின் ஒரு அங்கமாகிவிட்டது.

அது நீண்ட நாள் தொல்லை தராது. தற்போது நடிப்பில் தான் கவனம் செலுத்துகிறேன். என்னை பொறுத்தவரை ரோஷன் எனது முதல்பட கதாநாயகன். எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. என்னையும் ரோஷனையும் ஜோடியாக வைத்து படங்கள் எடுக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. அவ்வளவுதான்’ என்றார்.

Tags :
× RELATED எல்லாமே ஹைடெக்குங்க... 60 ஆயிரம்...