×

ஜான்வியை போட்டு கொடுத்த லவ்வர்

ஜான்வியை அவரது காதல் நடிகர் போட்டு கொடுத்த ருசிகர தகவல் நடந்துள்ளது. கடந்த ஆண்டு, தஹடக் இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஸ்ரீதேவி மகள் ஜான்வி. ஜோடியாக இஷான் கட்டார் நடித்தார். இருவரும் காதல் ஜோடிகளாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘ரூஹ் அஃப்ஸா’ படத்தில் ஹீரோ ராஜ்குமார் ராவ் உடன் இணைந்து நடித்து வருகிறார் ஜான்வி. ராஜ்குமார் ராவ் மீது ஏற்கனவே ஜான்விக்கு ஒரு கண்ணாம். ஒருமுறை, ‘ஐ லவ் யூ ராஜ்குமார் ராவ்’ என்று நெட்டில் நூல்விட்டிருக்கிறார்.

இதை மனதில் வைத்திருந்த  ஜான்வியின் காதலர் இஷான் கட்டார், ராஜ்குமார் ராவை எச்சரித்திருக்கிறார். ‘ஏற்கனவே நடிகை பத்ரலேகாவை நீங்கள் (ராஜ்குமார் ராவ்) காதலித்து வருகிறீர்கள். ஆனால் ஜான்விக்கு உங்களை ரொம்பவும் பிடிக்கும். எதற்கும் அவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள், காதலில் கவிழ்த்துவிடப் போகிறார்’ என கூறியிருக்கிறார். தன்னைப்பற்றி இஷான் போட்டுக் கொடுத்ததால் ராஜ்குமாரை பார்க்கும்போதெல்லாம் தர்ம சங்கடத்தில் நெளிகிறாராம் ஜான்வி.

Tags : Johnny ,
× RELATED திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு...