இயக்குனர் நிறம் மாறும் ‘பூ’ பார்வதி

நடிப்பில் பல வண்ணம் காட்டிய பூ பார்வதி தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தவரையில் எந்த பிரச்னையும் இல்லாமல் அவரது நடிப்பு தொழில் நன்றாக போய்கொண்டிருந்தது. மீடூ விவகாரத்தில் சில நடிகர்களை தாக்கி கருத்து தெரிவித்ததையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. தனக்கு வரும் பட வாய்ப்புகளை சிலர் தடுப்பதாக அவரே வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

தான் விரும்பிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதிலும் சில சமரசங்கள் செய்து நடிக்க வேண்டியிருந்ததால் திடீரென்று தானே இயக்குனர் ஆவது என்று முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி பார்வதி கூறும்போது,’மிக விரைவில் நான் டைரக்‌ஷன் செய்ய விருக்கிறேன். இதற்கான முடிவை ஏற்கனவே எடுத்து முடித்துவிட்டேன்.

நடிகையாக எனக்கு இது திரையுலகில் மிக முக்கிய படமாக இருக்கும். எனக்கு முக்கிய படம் என்பதைவிட என்னுள் புதைந்திருக்கும் இயற்கையின் வெளிப்பாடாக இருக்கும். நான் படம் இயக்குவது, ஒரு டைரக்டராக என்னை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நேர்மையாக ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற எண்ணமே காரணம்’ என்றார். நடிகைகள் ஸ்ரீபிரியா, ரேவதி, கீது மோகன்தாஸ் போன்றவர்கள் இயக்குனர்களாகி உள்ளனர். பூ பார்வதியும் தற்போது டைரக்டராக நிறம் மாறுகிறார்.

Related Stories:

>