×

ஜில் ஜில்... கூல் கூல்... ஹீரோ!

பிரபல ஹீரோக்களின் பட ரிலீஸின்போதும், அவர்களின் பிறந்த நாளின் போதும் ஹீரோக்கள் கட்அவுட்டுக்கு ரசிகர்கள் பால், பீர் அபிஷேகம் செய்து கொண்டாடுகின்றனர்.  ஆனால் ஹீரோ ஒருவர் தனது ரசிகர்களை ஊர் ஊராக தேடிச் சென்று ஐஸ்கிரீம் தந்திருக்கிறார். ‘நோட்டா’ படம் மூலம் தமிழில் அறிமுகமான விஜய் தேவரகொண்டா தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் சூப்பர் ஹிட் படங்களுக்கு சொந்தக்காரர். அடுத்து ராஷ்மிகா மந்தாவுடன் அவர் நடித்துள்ள டியர் காம்ரெட் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு ஐஸ் கிரீம் ட்ரீட் தர முடிவு செய்த விஜய் தேவரகொண்டா, ஐதராபாத் பன்ஜாரா ஹில்ஸ் பகுதிக்கு வந்தார். அங்கு திரண்டிருந்தவர்களுக்கு மேங்கோ ஐஸ்கிரீம் வழங்கியதுடன் 7 நகரங்களில் உள்ள ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு வழங்குவதற்காக 7 டிரக்குகளில் ஐஸ் கிரீம் அனுப்பி வைத்தார். கடந்த ஆண்டு தனது பிறந்த நாளின்போது 3 டிரக்குகளில் ஐஸ் கிரீம் வைத்து ஊர் ஊராக சென்று  வழங்கினார் விஜய் தேவரகொண்டா.

Tags : Jill Jill ,Hero ,
× RELATED பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்