×

‘பல்ப்’ வாங்கிய நடிகை

பிரபாஸின் பாகுபலி, கார்த்தியின் தோழா படங்களில் குத்தாட்டம் போட்டவர் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி. இவர் கனடாவை சேர்ந்தவர்.  மும்பையில் தங்கி இந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஓரிரு நாட்களுக்கு முன் மும்பை விமான நிலையத்தில் இறங்கி வந்தபோது நோராவை நோக்கி ஒரு ரசிகை செல்பி எடுக்க ஓடி வந்தார். நோராவும் தன்னுடன் ரசிகை செல்பி எடுக்கப்போகிறார் என்று எண்ணி அவருக்கு போஸ் தர தயாரானார்.

ஆனால் அந்த ரசிகை நோராவை தாண்டிச் சென்று பக்கத்தில் வந்து கொண்டிருந்த மற்றொரு வாலிபருடன் செல்பி எடுத்தார். அதைக் கண்டு நோரா நொந்துபோனார். ரசிகையிடம் பல்ப் வாங்கியதை மறைக்காமல் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தியிருக்கிறார் நோரா. துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்பது இதுதானோ என சிலர் கமென்ட் செய்திருக்கின்றனர்.

Tags : Actress ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...