×

சகோதரர்களான வில்லன்கள்

பிரேக்கிங் நியூஸ் என்ற படத்தில், சூப்பர் ஹீரோ கேரக்டரில் நடிக்கிறார் ஜெய். அவரை கடுமையாக எதிர்க்கும் வில்லன்களாக ராகுல் தேவ், தேவ் கில் நடிக்கின்றனர். பானுஸ்ரீ ஹீரோயின். ஜானி லால் ஒளிப்பதிவு  செய்ய, விஷால் பீட்டர் இசை அமைக்கிறார். ஆண்ட்ரூ பாண்டியன் இயக்குகிறார். அவர் கூறுகையில், ‘ராகுல்  தேவ், தேவ் கில் இருவரும் சகோதரர்களாக  நடிக்கின்றனர்.

சக்தி வாய்ந்த சர்வதேச தாதாவாக ராகுல் தேவ் நடிக்கிறார். ஒரு சாதாரண மனிதன் தனது மக்களின் நலனுக்காக சூப்பர் சக்திகளை வைத்து எப்படி போராடுகிறான் என்பது கதை’ என்றார். இவர் அந்நியன், முதல்வன் உள்பட 90க்கும் மேற்பட்ட படங்களுக்கு விஎப்எக்ஸ் மேற்பார்வையாளராக பணியாற்றியவர்.

Tags : Brothers villains ,
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்