×

உடையை பற்றி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த பேட்ட நடிகை

தன் உடையை பற்றி விமர்சித்தவர்களுக்கு நடிகை மாளவிகா மோகனன் மற்றொரு புகைப்படத்தை பதிவிட்டு தக்க பதிலடி கொடுத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மாளவிகா மேனன் அறிமுகமானார். இந்நிலையில் இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

இதற்கு ரசிகர்கள் சிலர் இந்த டிரஸ் போடுவதற்கு போடாமலேயே இருக்கலாம் என்று கமெண்ட் வெளியிட்டனர். இதற்கு கடுப்பான மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். அதில் மரியாதைக்குரிய பெண் எப்படி உடை அணிய வேண்டும் என்று நிறைய கமெண்ட்ஸ். எனக்கு பிடித்ததை அணிந்து மரியாதையாக அமர்ந்துள்ளேன் என்று கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மாளவிகா.

Tags : interviewer ,
× RELATED புகையிலை பயன்பாட்டை...