×

அய்யா உள்ளேன் அய்யா

சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் ஆகிய படங்களின் கதை, வசனம் எழுதியவர் ஈரோடு சவுந்தர். முதல் சீதனம், சிம்மராசி ஆகிய படங்களையும் இயக்கினார். தற்போது அவர் இயக்கும் படம், அய்யா உள்ளேன் அய்யா. அவரது பேரன் கபிலேஷ் ஹீரோ. அவரது தம்பி மகன் பால சபரீஸ்வரன் வில்லன்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரார்த்தனா, ஹீரோயினாக அறிமுகமாகிறார். தவிர மனோபாலா, லிவிங்ஸ்டன், பாவா லட்சுமணன், நளினி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சந்துரு. இசை, மகேந்திரன். தயாரிப்பு, வீர ஸ்ரீசந்தன கருப்பராயன் புரொடக்‌ஷன்ஸ்.

Tags : Sir ,
× RELATED ஆவணம் இன்றி எடுத்து சென்ற ₹1.89 லட்சம் பறிமுதல்