×

பட்டாளம், மேடவாக்கத்தில் வீடுகளில் நகை, பணம் திருட்டு

பெரம்பூர்: பட்டாளம் கனக ராய தோட்டம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சசிகுமார் (30). இவர், மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு அனைவரும் உறங்க சென்றனர். கதவை தாழ்ப்பாள் போடாமல் சாத்திவிட்டு தூங்கி உள்ளனர். நேற்று காலை 7 மணிக்கு எழுந்து பார்த்தபோது கதவு முழுவதும் திறந்து வீட்டின் கட்டிலில் வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் பீரோவில் இருந்த இரண்டு சவரன் நகைகள் மற்றும் மனைவியுடைய செல்போன் மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். புகாரின்படி, புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.வேளச்சேரி: மேடவாக்கம், குளக்கரை தெருவை சேர்ந்தவர் ராமு (42). இவரது மனைவி பூங்கோதை. இவர்கள், மேடவாக்கம் ரங்கநாதபுரத்தில் டெய்லர் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றனர். பின்னர் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 சவரன் நகைகள் மற்றும் ரூ.3,000 ரொக்கம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து, பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்….

The post பட்டாளம், மேடவாக்கத்தில் வீடுகளில் நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Pattalam, Medavakkam ,Sasikumar ,Pattalam Kanaka Raya Estate ,
× RELATED எனக்கு எப்பவுமே அவரு தான் ஹீரோ! Soori Jolly Speech at Garudan Success Meet | Sasikumar | Vetrimaaran