×

தாம்பரம் குறுவட்ட அளவர் அலுவலக குடியிருப்பு கட்டிடம்: எஸ்.ஆர்.ராஜா திறந்து வைத்தார்

தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சார்பில் தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள தாம்பரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தாம்பரம் குறுவட்ட அளவர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமை வகித்தார். தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு தாம்பரம் குறுவட்ட அளவர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சுரேஷ், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சென்னை மண்டல துணை இயக்குனர் ராமச்சந்திரன், உதவி இயக்குனர் அரி, தாம்பரம் வட்டாட்சியர் கவிதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்….

The post தாம்பரம் குறுவட்ட அளவர் அலுவலக குடியிருப்பு கட்டிடம்: எஸ்.ஆர்.ராஜா திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : TAMBARUM C-STANGER ,S. R.R. ,Tambaram ,Chengalbatu District Revenue and Disease Management Department ,Land Scales and Registrations Department ,TAMBARA ,Dinakaran ,
× RELATED தாம்பரம் அருகே மதுபோதையில் தாறுமாறாக...