×

பேய் கதையில் தமன்னா

அதே கண்கள் படத்தை இயக்கியவர் ரோஹின் வெங்கடேசன். இவர் அடுத்து பேய் கதை படத்தை இயக்குகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக இந்த படம் உருவாகிறது. இதில் தமன்னா நடிக்கிறார். அவருக்கு ஜோடி கிடையாது. அவருடன் யோகி பாபு, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதில் யோகி பாபு கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

10 நாட்கள் சென்னையிலும் 32 நாட்கள் காரைக்குடியிலும் ஒரே ஷெட்யூலில் படத்தை எடுத்து முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. ஜிப்ரான் இசையமைக்கிறார். டேனி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்கிறார். தமன்னா நடிப்பில் தேவி 2 படமும் பேய் கதை படமாக உருவாகியுள்ளது. இதற்கிடையே சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் ஒரு படத்திலும் தமன்னா நடித்து வருகிறார்.

Tags : Tamanna ,
× RELATED பையா ரீ-ரிலீஸ் மகிழ்ச்சி அளித்திருக்கிறது: கூறுகின்றனர் கார்த்தி, தமன்னா