திரிஷா கனவில் வங்காள ஹீரோ

சத்யஜித்ரேவின், தி புரோக்கன் ஜர்னி வங்காள மொழி படத்தில் நடித்த நடிகை சுவலட்சுமி, தமிழில் விஜய்யுடன் லவ் டுடே, அஜீத்துடன் ஆசை படங்களில் நடித்தார். அவரைத் தொடர்ந்து வங்காள மொழியிலிருந்து தமிழுக்கு வருகிறார் ஹீரோ மணி. ‘தேசி’ கன்னட படத்தில் அறிமுகமாகி பிறகு வங்காளம், இந்தி படங்களில் நடித்துள்ள இவர், இந்திய அரசின் பரம்ஸ்ரீ விருது, நேஷனல் எக்ஸலன்ஸ் விருது, மகாராஷ்டிரா அரசின் கவுரவ் சம்மான் விருது பெற்றிருக்கிறார்.

இளவட்டம் படத்தை இயக்கிய ஏஆர்கே.ராஜராஜன் 12 வருடத்துக்கு பிறகு இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் மணி. ‘தமிழனான எனக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்போதுதான் நிறைவேறுகிறது. திரிஷாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு’ என்கிறார் மணி.

Related Stories:

>