டிஆர்பி ரேட்டிங்கில் அடிச்சி தூக்கிய அஜித்தின் விஸ்வாசம்

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் விஸ்வாசம். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் விஸ்வாசம் படம் மே 1-ம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு சன் டிவியில் ஒளிப்பரப்பப்பட்டது. இதனையடுத்து விஸ்வாசம் படம் TRP-யில் பெரும் சாதனை படைத்துள்ளது. அதன்படி பாகுபலி-2, சர்கார், பிச்சைக்காரன் என அனைத்து படங்களின் TRP-யையும் பின்னுக்கு தள்ளி 18143 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளது.

அதன் விவரம்;

விஸ்வாசம் - 18143
பிச்சைக்காரன் - 17696
பாகுபலி 2 - 17070
சர்கார் - 16906

Tags : Ajith ,TRP ,
× RELATED அஜித்தையே உருகவைத்த மானு!