×

கொடைக்கானல்- பழநி மலைச்சாலையில் கனரக வாகனங்களை அனுமதிக்க வேண்டும்: லாரி உரிமையாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானல்- பழநி மலைச்சாலையில் கனரக வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கொடைக்கானல்- பழநி சாலையில் சவரி காடு அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் தற்காலிகமாக சாலை சீரமைக்கப்பட்டு இலகு ரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து இப்பகுதியில் இடையூறாக இருந்த பாறை உடைக்கப்பட்ட பின், பஸ் போக்குவரத்தும் துவங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக இந்த சாலை வழியாக லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பழநி பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு லாரியில் எம் சாண்ட், கருங்கல்கள், ஜல்லி, செங்கல் போன்ற கட்டுமான பொருட்கள், கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்டவைகள் வத்தலக்குண்டு வழியாகவே கொடைக்கானலுக்கு கொண்டு வரப்படுகிறது.இதனால் கொடைக்கானலுக்கு வரும் கட்டுமான பொருட்கள் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஒரு லோடு ஒன்றிற்கு ரூ.5 ஆயிரத்திற்கும் அதிகமாக தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் சாதாரண பொதுமக்கள், ஒப்பந்ததாரர்கள் மிகுந்த செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. அதேபோல கேஸ் சிலிண்டர் வாகனமும் வத்தலி்குண்டு வழியாக சுற்றி வருவதால் கேஸ் பயன்படுத்துபவர்களுக்கு உரிய நேரத்தில் கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் பழுது ஏற்பட்ட சாலை பகுதியில் கூடுதல் சீரமைப்பு பணிகளை உடனடியாக செய்து கொடைக்கானல்- பழநி மலைச்சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்….

The post கொடைக்கானல்- பழநி மலைச்சாலையில் கனரக வாகனங்களை அனுமதிக்க வேண்டும்: லாரி உரிமையாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Godikanal- Palani mountain range ,Godikanal ,Godikanal-Palani mountain range ,Kadikanal- ,Fani ,Dinakaraan ,
× RELATED கடைகளை உடைத்து யானைகள் அட்டகாசம்