×

நடிகையின் வருத்தம்

இசை அமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, குறளரசன் திருமணத்துக்காக இஸ்லாம் மதத்துக்கு மாறினார்கள். நடிகர் ஜெய்யும் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது இணைய தள பக்கத்தில் சில தினங்களுக்கு முன் இஸ்லாம் பெண்கள்போல் உடை அணிந்து படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதைப்பார்த்ததும் கஸ்தூரி மதம் மாறியதாக தகவல் பரவியது.

தற்போது தொழுகை செய்வதுபோல் ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார். அதை பார்த்த ரசிகர் ஒருவர், ‘உங்களுடைய இஸ்லாமிய பெயர் என்ன?’ எனக் கேட்டார். அதற்கு அவர், ‘கஸ்தூரி தபஸ்ஸும்’ என பதில் அளித்துள்ளார். சரியான விளக்கம் இல்லாத கஸ்தூரியின் அரைகுறை பதிலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுதது வருத்தம் தெரிவித்தவர். ‘புதிய படமொன்றில் முஸ்லிம் பெண்ணாக நடிக்கிறேன். ரமலான் நோன்பு ஆரம்பமாகிவிடடதால் அதற்கு பொருத்தமாக இப்படங்கள் வெளியிடுகிறேன் என்று விளக்கம் அளித்தார் கஸ்தூரி. ஆனாலும் சிலர், வரவர கஸ்தூரியின் விளையாட்டுக்கு அளவே இல்லாமல்போய்க்கொண்டிருக்கிறது என்று முணுமுணுக்கின்றனர்.

Tags : actress ,
× RELATED நடிகை குஷ்புவை கண்டித்து 3-வது நாளாக பெண்கள் போராட்டம்..!!