×

தமிழில் அரிதாகும் தலைப்புகள்

தமிழில் பட தலைப்பு வைத்தால் வரிச் சலுகை என்று அறிவிக்கப்பட்டபோது எல்லா படங்களுக்குமே தமிழ் பெயர்கள் வைக்கப்பட்டன. பின்னர் அந்த விதியை நீக்கியதும் மீண்டும் ஆங்கிலத்திலேயே பெரும்பாலான படங்களுக்கு தலைப்பு வைக்கப்படுகின்றன. ஆனாலும் தமிழ் பற்றாளர்கள் திரையுலகில் உள்ள நிலையில் தங்கள் படங்களுக்கு தமிழில் தலைப்புகள் வைக்கின்றனர். விஜய் சேதுபதி நடிக்கும் புதியபடமொன்றுக்கு, ‘சங்கத்தமிழன்’ என பெயரிடப் பட்டிருக்கிறது.

தலைப்புக்கே இணையத்தில் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. விஜய் சந்தர் இயக்கும் இப்படத்தில் ராசி கண்ணா, நிவேதா பெதுராஜ், நாசர் என பலரும் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல்பார்வையை பட தரப்பினர் வெளி யிட்டுள்ளனர். தலைப்பு இப்போது அறிவிக்கப்பட்டாலும் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடந்து இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.

Tags :
× RELATED சிறகன் விமர்சனம்