×

புதுகை மீனவர்கள் 3 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

அறந்தாங்கி: தமிழகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை கைது செய்வது, தாக்குவது,  வலைகள், படகுகளை பறித்து விரட்டி அடிப்பது என இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து நேற்று காலை  97 விசைப்படகுகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்களுடன் கோட்டைபட்டினம் சதாம் நகரை சேர்ந்த மனோகர் மகன் ரத்திஷ்(38) என்பவருக்கு சொந்தமான விசைபடகில் சதாம்நகரை சேர்ந்த நடராஜன் மகன் அருள்(36), கனகராஜ் மகன் அய்யப்பன்(30), சோனையன் மகன் சுந்தரம்(26) ஆகியோரும் சென்றனர்.இவர்கள் நேற்றிரவு 9.30 மணிக்கு 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ரித்திஷின் விசைப்படகை சுற்றி வளைத்து, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 3 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை படகுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் 3 மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சோகத்தில் உள்ளனர். இது தொடர்பாக கடலோர காவல்படை போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது….

The post புதுகை மீனவர்கள் 3 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Lankan Navy ,Aranthangi ,Tamil Nadu ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை