ஹாலிவுட் நடிகை 4வது திருமணம்... சினிமாவுல இதெல்லாம் சாதாரண விஷயமப்பா...

மொக்கை வாங்குவது, ஏச்சு வாங்குவதுபற்றி கவுண்டமணி ஒரு படத்தில் கூறும் போது, ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..’ என்பார். தற்போது சினிமா துறையில் காதல், திருமணம் எல்லாம் சாதாரணமாகிவிட்டது. கோலிவுட் சினிமா வில் நடக்கும் தொழில் நுட்ப விஷயங்களின் மாற்றத்துக்கு எப்படி ஹாலிவுட் படங்கள் காரணமாக இருக்கிறதோ அதுபோல் நட்சத்திரங்களுக்கு இடையேயான காதல், திருமண விஷயங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கும் ஹாலிவுட்டே காரண மாக இருக்கிறது.

ஏஞ்சல் ஐஸ், தி வெட்டிங் பிளானர், செலினா, ஜெர்ஸி கேர்ள் என பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஜெனிபர் லோபஸ் (வயது 47). இவர், 1997ல் ஓஜானி நோவா என்பவரை காதலித்து மணந்தார். பிறகு விவாகரத்து செய்தார். 2001ம் ஆண்டு கிரிஸ் ஜூடிட்டை மணந்து விவாகரத்து செய்தார், 2004ம் ஆண்டு ஹாலிவுட் நடிகர் மார்க் ஆண்டனியை மணந்து அவரையும் விவகாரத்து செய்தார். மூன்று கணவர்களை விவகாரத்து செய்த ஜெனிபர் தற்போது 4வதாக கைப்பந்து விளையாட்டு வீரர் அலெக்ஸை திருமணம் செய்திருக்கிறார்.

Related Stories: