×

சேதமடைந்த பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

திருவாடானை: திருவாடானை அருகே குஞ்சங்குளம் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பழைய அரசு பள்ளி ஓட்டு கொட்டகை கட்டிடத்தின் அருகே சிறிய அளவில் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வந்தாலும் போதிய வகுப்பறை வசதி இல்லாத காரணத்தால் 1முதல் 3ம் வகுப்புகள் வரை இந்த சிறிய பள்ளிக் கட்டிடத்திலும், 4 மற்றும் 5 ம் வகுப்புகள் அனைத்தும் இந்த சேதமடைந்த பழைய ஓட்டு கொட்டகை பள்ளிக் கட்டிடத்திலும் செயல்பட்டு வருகிறது.மேலும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் இந்த பழைய அரசு பள்ளி ஓட்டுக் கொட்டகை கட்டிடம் சேதமடைந்திருந்தது. இதனால் முட்புதர்கள் மண்டி பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், இரவு நேரங்களில் மதுபிரியர்களின் கூடாரமாகவும் உள்ளது. இந்நிலையில் சேதமடைந்த பழைய அரசு பள்ளி ஓட்டு கொட்டகை கட்டிடத்தின் அருகாமையில் கட்டப்பட்ட சிறிய பள்ளி கட்டிடத்தில் 1 முதல் 5 வகுப்புகள் வரை பாடம் நடத்த தற்போது போதிய இடவசதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.ஆகையால் முட்புதர்கள் மண்டி பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்த இந்த பழைய அரசு பள்ளி ஓட்டு கொட்டகை கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும். பிறகு கூடுதல் வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்: இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பழைய ஓட்டு கொட்டகை கட்டிடம் கட்டி பல ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் அதன் அருகே சிறிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனாலும் போதிய இடவசதி பற்றாக்குறையினால் இந்த பழைய அரசுப் பள்ளி ஓட்டு கொட்டகை கட்டிடத்தில் 4 மற்றும் 5ம் வகுப்புகள் செயல்பட்டு வந்தது.கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், இந்த அரசு பள்ளி பழைய ஓட்டுக் கொட்டகை கட்டிடத்தைச் சுற்றி முட்புதர்கள் மண்டி பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்ததால் மது பிரியர்களின் கூடாரமாக உள்ளது. ஆகையால் சேதமடைந்த பழைய அரசு பள்ளி ஓட்டு கொட்டகை கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு கூடுதல் வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித்தர வேண்டுமெனக் கூறினார்….

The post சேதமடைந்த பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tiruvadanai ,Kunchunkulam ,Thiruvadan ,
× RELATED விஷ வண்டுகள் அழிப்பு