×

சிவகார்த்திகேயன் 16 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். பாண்டிராஜ் இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக துப்பறிவாளன் படத்தின் மூலம் அறிமுகமான அனு இம்மானுவேல் நடிக்கிறார்.

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் மூலம் இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.

கடைக்குட்டி சிங்கம் வெற்றிக்கு பிறகு பாண்டிராஜின் அடுத்த படம் தொடர்பான அறிவிப்புக்கு ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இந்த பட அறிவிப்பு வெளியாகி, ரசிகர்களை  மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் சன் பிக்சர்ஸ், சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் ஆகியோர் ஒரே படத்தில் இணைவதால் படத்துக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

Tags : Sivakarthikeyan ,shooting pooja ,
× RELATED தஞ்சையில் அமரன் திரைப்படத்திற்கு...