×

கோலிவுட்டில் குதிக்கும் ‘மிஸ் இந்தியா’

‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா-2019’ பட்டத்துக்கான அழகிப் போட்டி கேரளாவில் நடந்தது. 22 மாநிலங்களை சேர்ந்த 240 அழகிகள் பங்கேற்றனர். இதில் தமிழகம் சார்பில் சென்னையை சேர்ந்த அக்‌ஷரா ரெட்டி (வயது 24) ‘மிஸ் சூப்பர் குளோப் இந்தியா-2019’ பட்டத்தை வென்றார். அக்டோபரில் துபாயில் நடக்கும் உலக அழகி போட்டியில் பங்கேற்க உள்ள அக்‌ஷரா கோலிவுட் ஹீரோக்களுடன் ஜோடி போட ஆசை வெளியிட்டுள்ளார். ‘ரஜினி, அஜித், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது.

பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். அவர்களில் யார் மிகவும் அழகு என தேர்ந்தெடுக்க அழகிப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். ஆண்களுக்கான ஆணழகன் போட்டிகளும் நடக்கிறது. அது பெரிய அளவில் பிரபலமாகவில்லை’ என்றார் மிஸ் இந்தியா அக்‌ஷரா. மிஸ் வேர்ல்டுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் இந்த மிஸ் இந்தியா கோலிவுட்டில் குதிக்க ஆசைப்படும் விவரம் தெரியவந்ததும் ஒரு சில இயக்குனர்கள் இப்போதே அவருக்கு வலை வீச தொடங்கியிருக்கின்றனர்.

Tags : Miss India ,
× RELATED ‘மிஸ் இந்தியா யுஎஸ்ஏ’ பட்டம் வென்றார் ஆர்யா