×

சீனாவில் கீர்த்தி யானை சவாரி

மறைந்த நடிகை சாவித்ரி வாழ்க்கை படம் கடந்த ஆண்டு நடிகையர் திலகம் பெயரில் தமிழிலும், மகாநதி பெயரில் தெலுங்கிலும் உருவானது. சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். படத்துக்கும், கீர்த்திக்கும் வசூலும், பாராட்டையும் ரசிகர்கள் அள்ளி குவித்தனர். தற்போது இப்படம் சீனாவில் நடக்கும் ஷாங்காய் திரைப்பட விழா போட்டிக்கு தேர்வாகியிருக்கிறது.

வரும் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை விழா நடக்கிறது. நடிகையர் திலகம் படத்தில் தங்கள் ஊருக்கு வரும் சாவித்ரியை (கீர்த்தி) ஊர் மக்கள் யானை மீது அமர்த்தி அழைத்து வந்து வரவேற்பு தருவார்கள். இப்படத்தில் யானை சவாரி செய்த கீர்த்தி விரைவில் ஷாங்காய் செல்வதன் மூலம் சீன திரைகளிலும் யானை சவாரி செய்ய இருக்கிறார்.

Tags : Kirti ,elephant ride ,China ,
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...