மலையாளத்தில் அறிமுகமாகும் ரெஜினா கெசன்ட்ரா

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துவிட்ட ரெஜினா, இப்போது மலையாளத்தில் அறிமுகம் ஆகிறார். பிரெண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்பட பல படங்களை இயக்கியவர் மலையாள டைரக்டர் சித்திக். அவர் அடுத்து இயக்கும் பிக் பிரதர்ஸ் படத்தில் மோகன்லால் நடிக்கிறார். காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக இது உருவாகிறது.

 இதில் மோகன்லால் ஜோடியாக நடிக்க ரெஜினா ஒப்பந்தமாகியுள்ளார். ‘பல மொழிகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அந்த வகையில் சமீபத்தில் இந்தியில் ‘எக் லட்கி கோ தேக்கா தோ அய்ஸா லகா’ படத்தில் நடித்தேன். இப்போது மல்லுவுட்டிலும் அறிமுகம் ஆவது சந்தோஷமாக இருக்கிறது’ என ரெஜினா கூறியுள்ளார்.

Related Stories: