×

ஹீரோ மீது விமர்சனம்; அமலாபால் கோபம்

ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நடித்திருந்தார் அமலாபால். இதே படம் தெலுங்கில் ராட்சசடு பெயரில் ரீமேக் ஆகிறது. சுதிர் வர்மா இயக்குகிறார். விஷ்ணு விஷால் கேரக்டரில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்த கேரக்டரில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இவர் தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் பற்றியும் ஹீரோ பெல்லம்கொண்டா சீனிவாஸ் மீதும் சமீபத்தில் அமலாபால் விமர்சனம் செய்ததாக தகவல் பரவியது. ‘ஒரிஜினல் படத்தின் தரம் மாறாமல் இந்த படத்தை ரீமேக் செய்வது கஷ்டம்.

விஷ்ணு விஷால் அளவுக்கு பெல்லம்கொண்டா சீனிவாஸ் நடிப்பாரா என்பது சந்தேகம்’ என அமலா பால் கமென்ட் செய்ததாக டோலிவுட்டில் செய்தி பரவியது. இதை அறிந்து அதிர்ச்சியும் கோபமும் அடைந்திருக்கிறார் அமலாபால். ‘நான் சொல்லாத ஒன்றை சொன்னதாக வதந்தி பரப்புகிறார்கள். யாரையும் நான் விமர்சிக்கவில்லை. வதந்தி பரப்புபவர்களின் கண்ணை பொய் எப்படி மறைக்கிறது என பாருங்கள்’ என கோபத்துடன் டிவிட் செய்திருக்கிறார் அமலா பால்.

Tags : Amalal ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!