லட்சுமியின் என்டிஆர் படத்தை ரிலீஸ் செய்த தியேட்டர்களுக்கு சீல்

சர்ச்சையான வகையில் பேசுவது, படங்களை எடுத்து சிக்கலில் மாட்டுவது ராம்கோபால் வர்மாவுக்கு புதிது கிடையாது. என்டிஆர் பெயரில் உருவான படத்தில் பாலகிருஷ்ணா நடித்த நிலையில், அதற்கு எதிராக லட்சுமியின் என்டிஆர் என்ற படத்தை வர்மா இயக்கியுள்ளார். இந்த படத்தில் என்டிஆரின் மனைவி லட்சுமியை அவர் முன்னிலைப்படுத்தி கதை அமைத்துள்ளார். தேர்தல் சமயம் என்பதால் இந்த படத்தினை தேர்தல் முடிவுகள் ெவளியாகும் வரை ரிலீஸ் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

கடந்த வெள்ளியன்று படம் திரைக்கு வரும் என கூறப்பட்ட நிலையில்தான் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே கடப்பா மாவட்டத்திலுள்ள 3 தியேட்டர்களில் இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இருக்கிறது. இதையடுத்து அதிகாரிகள் அந்த தியேட்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இணை கலெக்டர் உத்தரவின்பேரில் அந்த 3 தியேட்டர்களுக்கும் சீல் வைக்கப்பட்டதாக டோலிவுட் வட்டாரம் தெரிவித்துள்ளது.

Tags : Lakshmi NTR ,
× RELATED விக்கிரவாண்டி எம்எல்ஏ அலுவலக சீல் அகற்றம்