×

நிச்சயதார்த்தத்துக்கு ஓகே... நயன் திடீர் முடிவு... காதலன் ஹேப்பி

திருமணம் எப்போது என்று தெரியாமலே நயன்தாராவுடன் காதல் வானில் பறந்துகொண்டிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயனை நினைத்து உருகி உருகி காதல் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்.விக்னேஷ் பொறுத்துக்கொண்டாலும் அவரது குடும்பத்தினர் பொறுமை கடந்துவிட்டனர். திருமணம் எப்போது என்று முடிவு செய்ய வேண்டும் என நயனிடம் கண்டிஷன்போட ஆரம்பித்தனர்.

இதில் ஷாக் ஆனார் நயன். இதனால் விக்னேஷ்-நயன் காதலில் விரிசல் விடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது. ஆனால் நயன்தாரா தற்போது மனம் மாறியிருக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயதார்த்தத்துக்கு நயன் சம்மதம் தெரிவித்திருக் கிறார். திருமணம் பற்றி பின்னர்தான் சொல்வாராம்.

நயனின் புதிய முடிவால் விக்னேஷ் சிவனும் அவரது குடும்பத்தினரும் ஹேப்பியோ ஹேப்பி. ஒவ்வொரு படத்துக்கும் ஒன்றரை முதல் 2 கோடி வரை சம்பளம் வாங்குவதுடன், ரஜினியுடன் தர்பார், சிரஞ்சீவியுடன் சே ரா என அடுத்தடுத்து டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. காதலனுடன் நிச்சயதார்த்தத்துக்கு பிறகு நயனின் மார்க்கெட் என்னவாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Tags : lover ,Nayan ,
× RELATED ஓடிடியில் வெளியாகிறது ‘லவ்வர்‘!