சிவகார்த்திகேயன், தமன்னா படங்கள் ரிலீஸ் தள்ளிப்போனது

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்த படம் மே முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இப்போது மே இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. படத்தின் சில காட்சிகளை ராஜேஷ் ரீஷூட் செய்து வருவதாகவும் அதனாலேயே படம் தாமதமாகும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதேபோல் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் விஜய் இயக்கியுள்ள படம் தேவி 2. இது தேவி படத்தின் இரண்டாம் பாகம். இந்த படமும் மே முதல் வாரத்தில் திரைக்கு வரும் என கூறப்பட்ட நிலையில், இப்போது மே இறுதியிலே வெளியிடப்படுகிறது. இதற்கு காரணம், சரியான தியேட்டர்கள் கிடைக்காததால் படத்தை தள்ளிப்போட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

Tags : Sivakarthikeyan ,Tamanna ,
× RELATED விஜய்க்கு இறுக்கி அணைச்சி முத்தம் தந்த விஜய்சேதுபதி