×

ராம்சரணை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் ஷூட்டிங்கில் ஜூனியர் என்டிஆர் காயம்

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிக்கும் படம் ஆர்ஆர்ஆர். இதன் ஷூட்டிங் 2 மாதம் முன்பு துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. ஷூட்டிங்கில் ராம்சரண் தேஜா காயம் அடைந்தார். இதையடுத்து அவரது காட்சிகளுக்கு பதிலாக மற்ற நட்சத்திரங்களின் காட்சிகளை ராஜமவுலி படமாக்கி வந்தார். படத்தில் இந்தி நடிகர் அஜய் தேவகன், நடிகை அலியா பட் மற்றும் சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் படத்தின் ஷூட்டிங்கில் ஜூனியர் என்டிஆரும் காயமடைந்துள்ளார். சண்டைக் காட்சியில் நடித்தபோது, அவரது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை ராஜமவுலி நிறுத்தி வைத்துள்ளார். படப்பிடிப்பில் அடுத்தடுத்து 2 ஹீரோக்களும் காயம் அடைந்ததால் படக்குழு கவலையில் உள்ளது.

Tags : NTR ,shooting ,RRR ,
× RELATED மக்கள் மனதில் நீங்காத வடுவான...