×

தல, தளபதி பட்டத்தை மாற்றிய கீர்த்தி

தல அஜீத், தளபதி விஜய் என்று இருவருக்கும் பட்டப்பெயர் வைத்து கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். இருவருக்கும், நீங்கள் என்ன பட்டப் பெயர் வைப்பீர்கள் என்று கீர்த்தி சுரேஷிடம் நடிகை குஷ்பு நிகழ்ச்சி ஒன்றில் கேட்டார். அதற்கு பதில் அளித்த கீர்த்தி, அஜீத் ரொமான்டிக் ஹீரோ, விஜய்-டான்ஸிங் ஹீரோ, சூர்யா சென்டிமென்ட் ஹீரோ என்று பதில் அளித்தார். இந்நிலையில் அஜீத்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில்  நடிக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்திடம் தளபதியா? தலையா? என்று கேட்டபோது தளபதியா... மணிரத்னம் இயக்கிய தளபதி தானே... என்று பதில் அளித்தார். ஸ்ரத்தாவின் பதிலை கேட்டு டென்ஷன் ஆன விஜய் ரசிகர்கள்,’என்னதான் அஜீத் படத்தில் நடித்தாலும் தளபதி யார் என்று கூடவா தெரியாது’என விமர்சித்து கமென்ட் பகிர்கின்றனர்.

Tags : Keerthi ,
× RELATED அனிமேஷன் வீடியோவுக்கு டப்பிங் பேசிய பிரபாஸ்