×

‘எங்கிட்ட எஸ்கேப் ஆன ஒரே ஹீரோ...

விஜயகாந்த், கார்த்திக், அர்ஜூன், அஜித், விக்ரம், சூர்யா, பிரஷாந்த் என இரண்டு தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர் லைலா. பாலா இயக்கத்தில் நடித்த நந்தா, பிதாமகன் படங்கள் லைலாவுக்கு அடையாளம் தந்தது. 2006ம் ஆண்டு ஈரானிய தொழில் அதிபர் மெஹதியை திருமணம் செய்துகொண்டு செட்டிலானவர் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்வரை சினிமா பக்கம் தலைகாட்டவில்லை. அதன்பிறகு அவரை அழைக்கவும் ஆள் இல்லை. சமீபமாக 90களின் ஹீரோயின்கள் வித்தியாசமான வேடம் என்ற பெயரில் ரீஎன்ட்ரி ஆகின்றனர். அந்த வரிசையில் லைலாவும், ஆலிஸ் என்ற படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார்.

தனது இணைய தள பக்கத்தில் விஜய்யுடன் ஜோடியாக இருக்கும் புகைப் படத்தை வெளியிட்ட லைலா, ‘எங்கிட்ட எஸ்கேப் ஆன ஒரே ஹீரோ’ என்று அந்த படத்துக்கு கேப்ஷன் கொடுத்ததுடன், இது என்ன திரைப்படம்னு கண்டுபிடிங்க என சவாலும் விட்டிருந்தார். விஜய்யோடு லைலா நடிக்கவில்லை யே அப்புறம் எப்படி இந்த ஸ்டில் என்று பலரும் மண்டையை குழப்பிக்கொள்ள ஒரு சிலர் சரியாக கணித்தனர். விக்ரமன் இயக்கிய, ‘உன்னை நினைத்து’ படத்தில் முதலில் விஜய்தான் நடித்தார். பின்னர் அப்படத்திலிருந்து விலகினார். பிறகு அந்த வேடத்தில் சூர்யா நடித்தார். விஜய்யுடன் அப்படத்திற்காக எடுக்கப்பட்ட ஸ்டில்லைத்தான் லைலா பகிர்ந்திருக் கிறார் என சிலர் பொருத்தமாக விடைகூறி லைலாவின் பாராட்டை பெற்றுள்ளனர்.

Tags : hero ,
× RELATED பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்