×

ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஆக்கிமித்தது யார்?.. அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஆக்கிரமித்தது யார்?.. அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு மதுரை: தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துக்களை ஆக்கிரமித்தது யார் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி ஏழுப்பியுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை செய்தவர்கள் யார் யார் என்ற முழு விபரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யவும் அறநிலையத்துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். திருச்சியை சேர்ந்த சாவித்திரி துரைசாமி என்ற பெண் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கை தக்கல் செய்தார். அந்த வழக்கில்: தமிழகத்தில் மிகவும் பழமையான, தொண்மையான மடங்களில் ஒன்று தர்மபுர ஆதின மடம். இந்த ஆதின மடத்துக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும், பல்வேறு மாவட்டங்களில் நிலங்கள் மற்றும் கோயில்கள் இருந்து வருகிறது. இந்த கோயில்களுக்கு தர்மபுர ஆதினம் சார்பாக பராமரிப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில், திருச்சிக்கு அருகில் உள்ள உய்யக்கொண்டான் திருமலையில் உள்ள சிவன் கோயிலில் ரூ.100 கோடி மதிப்புள்ள 5ஏக்கர் நிலங்கள் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலங்களின் மூலம் பெறப்படும் வருமானத்தை வைத்து கோயில்களுக்கு பராமரிப்பு பணி செய்ய ஏற்படுத்தப்பட்ட நிலம் ஆகும். இந்த நிலங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளில் தருமபுர ஆதீனத்துக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதும், இதுவரை இந்து சமய அறநிலையத்துறையோ, தருமபுர ஆதினம் தரப்பிலோ அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. வழக்கு விசரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆக்கிரப்பு சம்பந்தமான ஆவணங்ள் தாக்கல் செய்திருந்தார். குறிப்பாக கீழமை நீதிமன்றங்கள் ஆதீனத்துக்கு சாதகமாக வழங்கிய தீர்ப்பு களையும் முன்வைத்து வாதிட்டார். இதனை தொடர்ந்து நீதிபதிகள்: ஆதீனத்துக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது நன்றாக தெரியவந்துள்ளது. இருந்த போதும் இதுவரை ஆக்கிரப்புகளை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த முழு விபரங்களை இந்து  அறநிலையத்துறை சார்பாகவும், தருமபுர ஆதினம் சார்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்திட்டுள்ளனர். …

The post ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஆக்கிமித்தது யார்?.. அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : iCort Branch ,Department of State Madurai ,Tarumapura ,iCourt Branch ,CUP ,Dinakaran ,
× RELATED உபரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு...